நீதிமன்றங்களில் ஜாமீன் வழங்கப்பட்ட ஏழு நாட்களில் கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் உள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது.
தமிழகம் முழுவதும் 153 விசாரணைக் கைதிகளும், 22 தண்டனை கைதிகளும் வெளியே வரமுடியவில்லை என அரசு தரப்பு தெரிவித்த நிலையில், அரசு உதவித் திட்டங்கள் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு மூன்று வாரங்களுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.