புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற 'விமரிஷ் சிருங்கலா' நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், அவரது கையெழுத்துடன் கூடிய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அன்பளிப்பாக வழங்கினார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், "புவனேஸ்வரில் நடந்த உலகக் கோப்பை ஹாக்கி பற்றி நானும், ஜனாதிபதியும் பேசினோம். ஒடிசாவின் உணவு பற்றி பேசினோம். ஜனாதிபதி மாளிகையின் சுவர்களில் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்களைக் கண்டேன். அது என்னை மெய் சிலிர்க்க வைத்தது" என்று தெரிவித்தார்.