
சென்னை அருகே நாளை மாலை 4 மணிக்கு இரு இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையதில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது. போர் ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.