சோழவந்தான், பிப்.16: சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் புகையிலை தடுப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் சவரிராஜ், சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ரகு வரவேற்றார். இதையடுத்து திருவேடகம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கிய இந்த பேரணி, முக்கிய வீதிகள் வழியாக பயணித்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய படியும், பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய படியும் சென்றனர். இந்த பேரணியில் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, சதீஸ், புவனேஸ்வரன், சமூக பணியாளர் ரதீஷ், நாட்டு நலப்பணி துணை அலுவலர் அருள்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post சோழவந்தான் அருகே புகையிலை தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.