சோழவந்தான் அருகே செல்போன் கடைக்காரரை தாக்கிய இருவர் கைது

3 hours ago 1

சோழவந்தான், மார்ச் 11: சோழவந்தான் அருகே, செல்போன் கடைக்காரரை தாக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் செல்போன் கடை வைத்திருப்பவர் ராஜா முகமது(32). இவரது கடையில் அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் தனுஷ்கோடி என்பவர், அவரது செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளார். அதை பழுது நீக்கிக் கொடுத்த ராஜா முகமது, அதற்குரிய தொகையை தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு பணம் கொடுக்க மறுத்த தனுஷ்கோடி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் இசக்கிமுத்து(26), நரசிங்கம்(30) ஆகியோர் ராஜா முகமதுவுடன் தகராறு செய்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த ராஜா முகமது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் எஸ்.ஐ முத்து வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்து, நரசிங்கம் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான தனுஷ்கோடியை தேடி வருகிறார்.

The post சோழவந்தான் அருகே செல்போன் கடைக்காரரை தாக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article