தேவையான பொருட்கள்
சோயா பனீர் – 200 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
குடைமிளகாய் – 1
கசூரி மேத்தி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 குழிக் கரண்டி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
சோயா பனீரை சிறிது சிறிதாக நறுக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அரைத்துப் போடவும். பொன்னிறமாக வதங்கியதும் தண்ணீரில் தக்காளியை கொதிக்க வைத்து தோல் நீக்கி அரைத்து ஊற்றவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் இஞ்சி பூண்டை சேர்க்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா , உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறவும். பிறகு டோஃபுவை சேர்க்கவும். நன்றி கிளறி கசூரி மேத்தியை தூவி இறக்கவும். சுவையான சோயா பனீர் கறி தயார்.
The post சோயா பனீர் கறி(டோஃபு) appeared first on Dinakaran.