ஊட்டி : சொக்கநள்ளி பழங்குடியினர் கிராமத்தில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊட்டி அருகே கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநள்ளி பழங்குடியினர் கிராமத்தில் ஜெஎஸ்எஸ்., உயர்கல்வி ஆராய்ச்சி குழுமம் மற்றும் மருந்தாக்கவியல் வேதியியல் துறை சார்பில் பெண்களுக்கான மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் தனபால் துவக்கி வைத்தார். மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் முனைவர் காளிராசன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி சுவாமிநாதன் மாதவிடாய் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறப்பு அழைப்பாளராக ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் கெந்தொரை குறித்து வக்கீல் சிவக்குமார், சுவிட்சர்லாந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விஞ்ஞானி கெந்தொரை ஜெகன்நாதன் ராமன் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி ஆய்வக உதவியாளர்கள் ஜெயக்குமார், அருண்குமார், பிரதீப்குமார் மாணவர்கள் சுபிக்க்ஷா, சரண்யா, தேஜஸ்வினி, ஆயிஷா, ஹன்னா மற்றும் நாகர்ஜுனா கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் வெங்கடேசன் நன்றி கூறினார். இந்த முகாமில், 70க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
The post சொக்கநள்ளி பழங்குடியின கிராமத்தில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.