சைக்கிளில் வந்த மாணவிகள் மீது பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

3 months ago 15
சென்னை அடையாறு பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற 2 மாணவிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெசன்ட் அவென்யூ சாலையில் நடந்த இந்த கோர விபத்தில் மஞ்சுளா என்ற 12ம் வகுப்பு மாணவி மீது எதிரே வந்த பேருந்து மோதி  ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த தீத்தியா என்ற மாணவி படுகாயம் அடைந்தார். பேருந்து ஓட்டுனர் ராஜாராம் தப்பியோடிவிட்ட நிலையில், பேருந்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Read Entire Article