
தமிழகத்தில் ஈரோடுக்கு அடுத்தபடியாக சேலத்தில் தான் மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், தலைவாசல், ஓமலூர், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, மேட்டூர் உள்பட பல பகுதிகளிலும் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் 721 விவசாயிகள் 4,597 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.12,589-க்கும், அதிகபட்சமாக ரூ.16,599-க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.11,189-க்கும் அதிகபட்சமாக ரூ.13,599-க்கும் ஏலம் போனது. மொத்தமாக ரூ.3 கோடியே 76 லட்சத்திற்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது.