
வாஷிங்டன்,
2031-ம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த பிபா முடிவெடுத்துள்ளது. அதன்படி வழக்கமாக கலந்துகொள்ளும் 32 அணிகளில் இருந்து 48 ஆக அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.
12 பிரிவுகள் கொண்டதாக அணிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் ஆட்டங்களின் எண்ணிக்கை 64-லிருந்து 104 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் 2027-ல் பிரேசிலில் நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை தொடரில் இது பொருந்தாது என்றும் பிபா அறிவித்துள்ளது.
2031-ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடம் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தொடரை நடத்த அமெரிக்கா மட்டுமே விருப்பம் தெரிவித்திருப்பதால் அமெரிக்காவிலேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.