'எஸ்.கே 24' - சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்கிறாரா மோகன்லால்?

5 hours ago 1

சென்னை,

இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம்தேதி வெளியாக உள்ளது.

தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை(எஸ்.கே 24) விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாகவும் அப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தந்தை-மகன் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக இருப்பதாக தெரிகிறது. இதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது,

Read Entire Article