சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைப்பு

3 months ago 11

சேலம்: சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பெஞ்சல் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், வீடுகள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படாமல் இருக்கும் வகையில், ஆவின் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சேலம் ஆவினில் இருந்து, நேற்று முன்தினம் 15 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்றும் 15 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் நிலைமை சீரடையும் வரை, சேலம் ஆவினில் இருந்து பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article