
சேலம்,
சேலம்-அரக்கோணம் ரெயில் (16088) மற்றும் அரக்கோணம்-சேலம் (16087) பயணிகள் ரெயில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 10.50 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலம்- அரக்கோணம் ரெயில் (16088) சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். இந்த ரெயில் இரு மார்க்கத்திலும் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.