சேலம் - அரக்கோணம் பயணிகள் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்

3 hours ago 2

சேலம்: சேலம் - அரக்கோணம் இடையே இரு மார்க்கத்திலும் வாரம் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலின் சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த ரயில் இயக்கப்படாது என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - அரக்கோணம் (எண்.16088) பயணிகள் ரயிலானது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் 5 நாட்களிலும், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு இரவு 8.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த பயணிகள் ரயிலின் சேவை, இன்று (ஜன. 20) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக, மறு அறிவிப்பு வெளியாகும் வரை, இந்த ரயிலின் சேவை, நிறுத்தப்பட்டது.

Read Entire Article