ஆளுநர் ரவிக்கு திருவள்ளுவர் படம் அனுப்பும் போராட்டம்

3 hours ago 2

சென்னை: வியாசர்பாடி எம்.கே.பி.நகரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில், தலைநகர் மக்கள் இயக்கம் சார்பில், ஆளுநருக்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளூர் படத்தை அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. பின்னர், தலைநகர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறியதாவது: தமிழ்நாட்டுக்கு இந்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ள ஆளுநர் ரவி, திருவள்ளுவர் தினம் மற்றும் திருவள்ளுவர் சம்பந்தமான நிகழ்ச்சிகளில், காவி உடுத்தி, ருத்ராட்சம் அணிந்துள்ள திருவள்ளுவர் படத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார். இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை தான் ஆளுநர் ரவி பயன்படுத்த வேண்டும்.

இந்திய அரசினுடைய பிரதிநிதியாக தமிழ்நாட்டில் இருக்கின்ற அவர் ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்திருந்தால் கூட தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு உணர்த்துவதற்காக பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஆளுநர் ரவிக்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பி வைக்கின்றோம். இனிமேலாவது ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை தான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆளுநர் மாளிகை நோக்கி திரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநர் ரவிக்கு திருவள்ளுவர் படம் அனுப்பும் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article