சேலத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு

3 hours ago 1

சேலம்,

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. அதாவது, சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 4 பேருக்கும், மேலும் சில பகுதியை சேர்ந்த 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதனை சேலம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 20 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிலர் வேண்டும் என்றே வீண் வதந்தியை பரப்பி வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒருவர் கூட கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறவில்லை. இது முற்றிலும் தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்தனர்.

Read Entire Article