சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்

3 months ago 19

 

பந்தலூர், அக் 8: பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் நேற்று முன்தினம் இரவு எருமாடு பகுதியில் இருந்து வந்த காரும் சேரம்பாடியில் இருந்து வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 3 பேரும், ஆட்டோவில் சென்ற ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, காயப்பட்டவர்கள் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சேரம்பாடி காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்து காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி, சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

 

The post சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல் appeared first on Dinakaran.

Read Entire Article