வீரவநல்லூர்,மார்ச் 11: சேரன்மகாதேவி வட்டாரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 865 பேருக்கு இசக்கிசுப்பையா எம்எல்ஏ இலவச சீருடைகள் வழங்கினார். சேரன்மகாதேவி தாலுகாவிற்கு உட்பட்ட கோபால சமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, கங்கனாங்குளம், காருகுறிச்சி, புதுக்குடி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 865 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சரான இசக்கிசுப்பையா எம்எல்ஏ, தனது சொந்த செலவில் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினார். நிகழ்வில் ஜெ. பேரவை துணைச் செயலாளர் சிவன்பாபு, மாவட்ட அவைத்தலைவர் மாடசாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர் மாரிச்செல்வம், நகரச் செயலாளர்கள் சீனிவாசன், பழனிக்குமார், முத்துகிருஷ்ணன், திருமலைநம்பி, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post சேரன்மகாதேவி வட்டார ஆட்டோ டிரைவர்கள் 865 பேருக்கு இலவச சீருடை appeared first on Dinakaran.