சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது சாதகமா..? சிஎஸ்கே பயிற்சியாளர் காட்டமான பதில்

1 month ago 7

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கிடம் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது உங்களுக்கு சாதகமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு காட்டமாக பதிலளித்த பிளெமிங், "நாங்கள் பல வருடங்களாக சொல்லி வருவது போல, சேப்பாக்கத்தில் எங்களுக்கு சொந்த மண் சாதகம் எதுவும் இல்லை. நாங்கள் சென்னைக்கு வெளியேயும் கோப்பையை வென்றுள்ளோம். உண்மையை சொல்ல வேண்டுமெனில் சேப்பாக்கத்தில் உள்ள பிட்சை எங்களால் கணிக்க முடியவில்லை. கடந்த சில வருடங்களாகவே அதை எங்களால் கணிக்க முடியவில்லை.

எனவே, இது புதியதல்ல. நாங்கள் ஒவ்வொரு நாளும்இதைப் பற்றிப் பேச முயற்சிக்கிறோம். இது ஒன்றும் பழைய சேப்பாக்கம் பிட்ச் கிடையாது. இங்கே உள்ள ஒவ்வொரு ஆடுகளத்தின் தன்மை என்ன என்பதை புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது அது மிகவும் வித்தியாசமானது" என்று கூறினார்.

Read Entire Article