தேவையானவை:
துவரம்பருப்பு – கால் கப்,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
நறுக்கிய சேனைக்கிழங்கு – 1 கப்,
சின்ன வெங்காயம் – 6,
பச்சை மிளகாய் – 2,
சாம்பார்பொடி – ஒன்றேகால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
சீரகம் – கால் டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 1,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
துவரம்பருப்பை தண்ணீர் + மஞ்சள்தூள் சேர்த்து அரைப்பதமாக வேகவைத்துக் கொள்ளவும்.சேனைக்கிழங்கை தோல் நீக்கி பட்டாணி அளவு பொடித்துண்டுகளாக நறுக்கி அலசிக்கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும். கிழங்குத் துண்டுகள்,வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி ஆகியவற்றை பருப்புடன் சேர்த்து வேகவிட்டு, உப்பு சேர்த்து,சார்ந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், தாளிப்பவற்றை போட்டு தாளித்து கூட்டில்சேர்த்து கலக்கி கொதித்ததும் இறக்கவும். இது சாதத்துடனும், சப்பாத்தியுடனும் சாப்பிடுவதற்கு சுவையாகஇருக்கும்.
The post சேனைக்கிழங்கு கூட்டு appeared first on Dinakaran.