செல்வராகவனின் அடுத்த படம்... பூஜையுடன் தொடக்கம்

1 week ago 5

சென்னை,

சந்தானத்தின் ''டிடி நெக்ஸ்ட் லெவல்'' படத்தில் கடைசியாக நடித்திருந்த இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், நடிகராக தனது அடுத்த படத்திற்காக டென்னிஸ் மஞ்சுநாத்துடன் கைகோர்த்துள்ளார்.

இப்படம் இன்று பூஜையுடன் துவங்கி இருக்கிறது. இப்படத்தில் குஷி ரவி, கவுசல்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.

படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். 'பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்' , 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Next https://t.co/XQOEYLeVrJ

— Dennis Manjunath (@dennisfilmzone) July 2, 2025
Read Entire Article