
திருப்பதி,
ரெயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டபடி, திருப்பதி மற்றும் சிக்கமகளூரு இடையே (காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக) கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஒரு புதிய ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, ரெயில் எண் 17423 திருப்பதி-சிக்கமகளூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக) ஜூலை 17, 2025 அன்றும், வியாழக்கிழமைகளிலும் இரவு 21.00 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சிக்கமகளூருவை சென்றடையும்.
இதேபோன்று ரெயில் எண் 17424 சிக்கமகளூர்-திருப்பதி வாராந்திர எக்ஸ்பிரஸ் (ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக) ஜூலை 18, 2025 அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 5.30 மணிக்கு சிக்கமகளூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 07.40 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.
பெட்டி அமைப்பு: 2- ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், 4- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 6- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன்.