செல்வந்தர் ஆகும் யோகம் யாருக்கு வாய்க்கும்?

4 months ago 11

மனிதன் தனது அத்தியாவசிய தேவைகளுக்கு அடிப்படையான செல்வத்தை பெறுவதற்காக ஓடி ஓடி உழைக்கிறான். சிலருக்கு செல்வம் பெருகிக்கொண்டே போகும். விரைவில் செல்வந்தர் ஆகிவிடுவார்கள். சிலர் எவ்வளவுதான் உழைத்து சம்பாதித்தாலும் கையில் நிலைப்பதில்லை. செல்வந்தர் ஆவதற்கும் ஒரு யோகம் இருக்க வேண்டும்.

ஜாதகத்திற்கும் செல்வத்திற்கும் தொடர்பு உண்டா?

பண வரவுக்கும் ஜாதகத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இதற்கு செல்வ யோகம் மிக மிக அவசியம். செல்வ யோகங்களை அஷ்ட லஷ்மி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், ஸ்ரீ நாத யோகம், லக்ன அதி யோகம், கஜ கேசரி யோகம், புதாத்ய யோகம், அம்ச யோகம் போன்றவைகள் செல்வ யோகங்கள் ஆகும், இவ்வாறு இருக்கப் பெற்றவர்கள் வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதை கண்டிருக்கின்றோம்.

பொதுவாக தனகாரகன் என்று சொல்லப்படும் குருவின் நிலை மற்றும் சுக போகங்களைத் தரும் சுக்கிரனின் நிலை. ஜாதகத்தில் தனஸ்தானம், லாபஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், முக்கிய இடம் பெறுகின்றன. இந்த ஸ்தானங்கள் மட்டுமே பண வரவை தீர்மானிப்பதில்லை. இவற்றுடன் மற்ற ஸ்தானங்கள் சேர்க்கை மற்றும் கிரக நிலைகளை பொருத்தும் பணம் வரும்.

எந்த எந்த வகையில் செல்வம் அல்லது பணம் வரும்?

* தன ஸ்தானத்துடன் சகோதர ஸ்தானம் தொடர்பு பெற்றால் இளைய சகோதரர் வழி பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் மாதுர் ஸ்தானம் தொடர்பு பெற்றால் தாய் வழி அதாவது தாயின் சொத்து அல்லது அவரின் வருவாயை தான் பெறுதல் மூலம் பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானம் தொடர்பு பெற்றால் தங்கள் பிள்ளைகளால் அல்லது தாத்தா பாட்டியின் வழி பணம் வரும்.

* உதாரணமாக தன ஸ்தானத்துடன் ருண ரோக சத்துரு ஸ்தானம் தொடர்பு பெற்றால் வழக்குகளின் மூலம் அல்லது தன் எதிரியின் மூலம் தனம் வரும்.

* தன ஸ்தானத்துடன் களத்திர ஸ்தானம் தொடர்பு பெற்றால் மனைவி அல்லது கணவன் வழி பணம் வரும். அதாவது திருமணம் மூலம் பணம் வருதல்.

* தன ஸ்தானத்துடன் மாங்கல்ய ஸ்தானம் தொடர்பு பெற்றால் விபத்து மற்றும் இறப்பினால் பணம் வரும் அதாவது இன்சூரன்ஸ் வழி பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் பிதுர் ஸ்தானம் தொடர்பு பெற்றால் தந்தை வழி அதாவது தந்தையின் சொத்து கிடைக்க பெறுதலை குறிக்கும்.

* தன ஸ்தானத்துடன் கர்ம ஸ்தானம் தொடர்பு பெற்றால் தானே சம்பாதித்தல் அதாவது சுய தொழில் அல்லது வேலை பார்ப்பதன் மூலம் பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் லாப ஸ்தானம் தொடர்பு பெற்றால் மூத்த சகோதர சகோதரியின் மூலம் பணம் வரும்.

* தன ஸ்தானத்துடன் அயன சயன போக ஸ்தானம் தொடர்பு பெற்றால் வெளிநாடு மூலம் அதாவது இங்கிருந்தே செல்வத்தை ஈட்ட முடியும் உதாரணமாக ஏற்றுமதி இறக்குமதி செய்வதன் மூலமும் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்தும் பணம் பெற இயலும்.

 

உதாரண ஜாதகம் 1:

இந்த ஜாதகதாரர் செல்வயோகம் கொண்டவர். கன்னி லக்னம் ரிசப ராசி ஜாதகரான இவர் பல கோடிகளுக்கு அதிபதியாக மிகப் பெரிய செல்வந்தராக இருக்கும் யோகம் உள்ளது. இவரது ஜாதகத்தில் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளதை காணலாம். இந்த ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். தனகாரகனான குருவும் ஆட்சி பெற்று உள்ளதை இதில் காணலாம். மேலும், லாபஸ்தானாதிபதி சந்திரன் உச்சம் பெற்றுள்ளார். இப்படி அனைத்து விதத்திலும் செல்வ யோகம் அமைந்துள்ளது என்பதை அறியலாம்.

உதாரண ஜாதகம் 2:

இந்த ஜாதகதாரர் மிதுன லக்னம் மேஷ ராசி ஜாதகர். இவரது ஜாதகத்தில் தனஸ்தானாதிபதி கேந்திரத்தில் அமர்ந்து சந்திர மங்கள யோகத்துடன் அமர்ந்துள்ளார். மேலும், லாப ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது. தனஸ்தானத்தில் குரு உச்சம் பெற்றுள்ளார். இவரும் மிக பெரிய கோடீஸ்வரராக இருக்கக்கூடிய யோகம் உள்ளது. லக்னாதிபதியும் புதனும் ஆட்சி பெற்றுள்ளார். பஞ்ச மகா புருஷ யோகத்தில் பத்ரா யோகமும் உள்ளதை நாம் காணலாம்.  

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389

Read Entire Article