செல்போனில் வீடியோ பார்த்தபடி அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்

1 month ago 6

திருச்சி,

திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து கரூருக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. அந்த பஸ் திருச்சியை கடந்து சென்றபோது, டிரைவர் ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு வீடியோ பார்த்தபடி பஸ்சை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. அந்த பஸ்சில் குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் அவரிடம் செல்போன் பார்த்துக்கொண்டு பஸ்சை இயக்க வேண்டாம் என்று கண்டிக்கவே சிறிதுநேரம் அவர் செல்போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு, மீண்டும் அவர் செல்போனில் வீடியோ பார்த்தபடி ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் தான் பயணம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் செல்போன் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய வீடியோ தொடர்பாக கரூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து பஸ் டிரைவர் சரவணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் உத்தரவிட்டார். வாகனங்களை இயக்கும்போது செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், அந்த விதிமுறையை மதிக்காமல் அதுவும் அரசு பணியில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Read Entire Article