சென்னையில் மேலும் 10 இடங்களில் தெருநாய் இனக் கட்டுப்பாடு மையம்: மாநகராட்சி தகவல்

6 hours ago 3


சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையிலும் வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் திருவிக.நகர் மண்டலம், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம்-லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம்-கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம்-சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம் மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் தெரு நாய்கள் இன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், புளியந்தோப்பு, திருவிக.நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தெரு நாய்கள் இனபெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக சென்னை மாநகராட்சியின் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் தெரு நாய்கள் இன கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன் உடல்நலக்குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சி விதிகளின்படி, செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

இதற்காக நாய்கள் இன கட்டுப்பாட்டு மையங்களிலும் இணையதளம் வாயிலாகவும் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் ரூ.50/- என்ற கட்டணத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இதுதவிர, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கும் இனக்கட்டுப்பாடு மைய ஊழியர்களுக்கும் செல்லப்பிராணிகள் சிகிச்சை மைய பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தன்று வெறிநாய்க்கடி நோய் தடுப்பு நடவடிக்கையாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

The post சென்னையில் மேலும் 10 இடங்களில் தெருநாய் இனக் கட்டுப்பாடு மையம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article