சென்னை: தொகுதி பிரச்சனைகள், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை பற்றி முதல்வரிடம் பேசினேன் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தவாக தலைவர் வேல்முருகன் இன்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சந்தித்து பேசினர். அந்த சந்திப்பில், விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.5.70 கோடியில் 21 பேரின் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரை சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தொகுதி பிரச்சனைகள், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை பற்றி முதல்வரிடம் பேசினேன். வன்னியர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 21 போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தவாக தலைவர் வேல்முருகன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.