
சென்னை,
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ரவுடி தொண்டை ராஜ். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார்.
இந்த நிலையில், தொண்டைராஜ் இன்று தனது மனைவியுடன் வியாசர்பாடி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், தொண்டை ராஜை ஓட ஓட சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனால் ரத்த வெள்ளத்தில் மனைவி கண் முன்னே சம்பவ இடத்திலேயே தொண்டை ராஜ் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.