சென்னையில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையம்: உதயநிதி திறந்து வைத்தார்

8 hours ago 1

சென்னை ,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை தன்னிகரற்ற பல சாதனைகளை படைத்து வருகிறது.

நம் வீரர்களை உடல் ரீதியாகவும் - மன ரீதியாகவும் வலிமையாக்க அதற்குரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.

அந்த வகையில், நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை இன்று திறந்து வைத்தோம்.

மேலும், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த டென்னிஸ் வீரர் - வீராங்கனையருடன் கலந்துரையாடி, இந்த புதிய உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாழ்த்தினோம். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article