சென்னையில் தனக்கு தானே சோடியம் நைட்ரேட் ஊசி போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!

1 day ago 2

சென்னை: சென்னையில் தனக்கு தானே சோடியம் நைட்ரேட் ஊசி போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். கொடுங்கையூர் மூலக்கடையை சேர்ந்தவர் பால் யூட்டி கிளாஸ் (20). இந்த இளைஞர் தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களாக செல்போனுக்கு அடிமையாகி தூக்கம் இல்லாமல் இருந்த வந்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் மாணவரின் வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் இருக்க கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மாணவர் உயிரிழந்ததாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர் உயிரிழப்பு குறித்து கொடுக்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் இவர் சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை போட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் எதற்காக இந்த ஊசி செலுத்தி கொண்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் தனக்கு தானே சோடியம் நைட்ரேட் ஊசி போட்டுக் கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article