சென்னையில் கிரேன் மீது பைக் மோதிய விபத்தில் போக்குவரத்து தலைமை காவலர் உயிரிழப்பு

3 months ago 22
சென்னையை அடுத்த மணலியில், பைக்கில் சென்ற போக்குவரத்து தலைமை காவலர் லட்சுமணன், சாலையில் நின்ற கிரேன் மீது மோதி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காலை பணிக்கு செல்வதற்காக பைக்கில் வேகமாக சென்ற லட்சுமணன், வளைவில் திரும்பும்போது, CPCL நிறுவனத்துக்குள் செல்வதற்காக நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதி, இறந்ததாக கூறப்படுகிறது. லட்சுமணன் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், மோதிய வேகத்தில், கழுத்து பகுதியில் செல்லும் நரம்புகளில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 
Read Entire Article