சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2 weeks ago 4

சென்னை: சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவது அறிவிப்பு: உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களைப் பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது.

Read Entire Article