சென்னை : இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கு நேரடி விமான போக்குவரத்து வாரத்தில் ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் ஜித்தா தளத்தில் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் வாரம் 2 முறை நேரடி விமானங்களை இயக்குகிறது. திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நேரடி விமானம் புறப்படுகிறது. தமிழ்நாட்டு பயணிகளுக்கு விமான சேவை மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
ஜித்தா விமான நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.10 மணிக்கு சென்னை வந்தடையும். பின்னர் சென்னையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 11.15 மணிக்கு ஜித்தா சென்றடைகிறது. முன்னதாக, வாரம் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 முறை விமானம் இயக்கப் படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 முறை கடிதம் எழுதி வலியுறுத்தினார். முதலமைச்சரின் கோரிக்கை ஏற்று ஒன்றிய விமான போக்குவரத்து துறை கவனத்தில் கொண்டு சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடி விமான சேவையை துவக்கியுள்ளது. இதற்காக முயற்சி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு வாரம் இருமுறை விமான சேவை : முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி appeared first on Dinakaran.