சென்னை மாதவரத்தை சேர்ந்த முனைவர் G.மூர்த்தி என்பவர் ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக அளித்த புகாரின்பேரில் சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் காவல் நிலையம், மத்திய குற்றப்பிரிவு, குற்ற எண் 313/2024 சட்டப்பிரிவு 316(2) 318(4) BNS and sec 66D of IT Act 2000-ன் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகார்தாரர் வலைதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் மொத்தம் ரூபாய் 90,77,800/- போலியான பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்துள்ளார்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட 1.அருண் குமார் வ/33, த/பெ.பிரசாத், சேலம் மாவட்டம் என்பவரை சேலத்திலும் 2.கண்ணன், வ’41, த/பெ.கந்தசாமி. கிழக்கு தாம்பரம். என்பவரை சென்னையிலும் சைபர் கிரைம் காவல் நிலையம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதின்பேரில் ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை Binance செயலி மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றி 25 சதவிதம் வரை கமிஷன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
உதிரிகள் சென்னை, சைதாப்பேட்டை கனம் 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே இணையதளங்கள் மூலம் முதலிடு செய்யும் போதும் அவற்றை பார்வையிடும் போதும் அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு தங்களது பணத்தை யாரிடமும் அனுப்பவேண்டாம் மேலும் நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் அந்நிய நபர்களிடம் பணம் எதுவும் கொடுக்கவோ அல்லது இணையவழியாகவோ செலுத்த வேண்டாம் என்றும் அதிகப்படியான கமிஷன் என்று ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறக்கூடாது.
சைபர் குற்றங்களை 1930 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் மற்றும் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
The post சென்னையில் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது appeared first on Dinakaran.