
சென்னை,
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் காரணமாக வான் மண்டல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து செல்லும் 5 விமானங்களும் சென்னைக்கு வரும் 5 விமானங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு வழிமுறைகளை உறுதி செய்த பின்னர் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.