போர்ச்சூழல்: பஞ்சாப்பில் இரவில் முழு மின்தடை

4 hours ago 3

அமிர்தசரஸ்,

பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இந்த அதிரடி வேட்டையில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப் பட்டதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும், போலீசாரின் விடுமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போர்ச்சூழல்- பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் இரவில் முழுமையாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இரவு 9.00 முதல் காலை 5.00 வரை குருதாஸ்பூரில் முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை, மருத்துவமனைகளுக்கு மின்தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article