
புதுடெல்லி,
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வேதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
2013 ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் டெஸ்ட் தொப்பியை உங்களுக்கு வழங்கியதும், பின்னர் மறுநாள் வான்கடே மைதானத்தின் பால்கனியில் உங்களுடன் நின்றதும் எனக்கு நினைவிருக்கிறது - உங்கள் பயணம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அன்றிலிருந்து இன்றுவரை, நீங்கள் ஒரு வீரராகவும், ஒரு கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட்டுக்கு உங்கள் சிறந்ததை வழங்கியுள்ளீர்கள். உங்கள் டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ரோகித் சர்மா, மேலும் வரவிருக்கும் விஷயங்களுக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார் .