சென்னை: சென்னை விமான நிலையத்தில் தற்போது 7 தீயணைப்பு வண்டிகள் செயல்பாட்டில் உள்ளன. அவைகளில் ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பழையதாகவும் இருக்கின்றன. இதனால் சென்னை விமான நிலைய தீயணைப்பு துறையை அதி நவீனப்படுத்தும் நோக்கத்தில், சென்னை விமான நிலையத்திற்கு, 2 புதிய தீயணைப்பு வண்டிகள் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.இந்த அதிநவீன தீயணைப்பு வண்டியில், ஒரே நேரத்தில் 10,000 லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அதோடு 1,300 லிட்டர் ஃபோர்ம் நுரைகளையும் சேமித்து வைக்க முடியும். மேலும் 30 செகண்டில்,80 கிலோமீட்டர் வேகத்தில், மிக உயரமான கட்டிடங்களிலும் தண்ணீரை பீச்சி அடித்து எவ்வளவு பெரிய தீயாக இருந்தாலும், உடனடியாக கட்டுப்படுத்தும் திறன், இந்த நவீன தீயணைப்பு வண்டிக்கு உள்ளது. அதோடு இந்த தீயணைப்பு வண்டி 705 எச்பி இன்ஜின் பவருடன் கூடியது.
அதோடு அதின் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, சென்னை விமான நிலையத்திற்கு, நவீன ரக தீயணைப்பு வண்டிகள், 2 புதிதாக வந்துள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில், இப்போது தீயணைப்பு வண்டிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளன. அதோடு சென்னை விமான நிலையத்தில் மருத்துவ வசதிக்காக, அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே 2 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்தன. அது போதுமானதாக இல்லை. அந்தக் குறையை போக்கும் விதத்தில், இப்போது 4 நவீன ஆம்புலன்ஸ்கள், நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஆம்புலன்சில் அனைத்து விதமான நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இப்போது ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் இனிமேல், திடீரென பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் உட்பட அனைவரையும், அவசரமாக மருத்துவ சிகிச்சைக்காக, உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இந்த 2 தீயணைப்பு வண்டிகள், 4 புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றை, நேற்று சென்னை விமான நிலைய இயக்குனர் சி வி தீபக், கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.
The post சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக 4 ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு வாகனங்கள்: இயக்குனர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.