
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160-வது ஆண்டு விழாவில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக இந்த விழாவில் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இவ்விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், ஆர்.கிரிராஜன், இந்திய கூடுதல் சொலிசிடர் ஜென்ரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்திய முன்னாள் அட்டர்னி ஜென்ரல் கே.பராசரன், சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பாஸ்கர், செயலாளர் எஸ்.திருவேங்கடம், மூத்த வழக்கறிஞர் ராஜய்யா உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.