சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; இறுதிப்போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

3 hours ago 2

ராய்பூர்,

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதியில் இலங்கையையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இறுதிப்போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

Read Entire Article