
பெங்களூரு,
இந்திய அணியில் இளம் நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி (வயது 21). இவர் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டிக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்ட போது வயிற்று பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
இதையடுத்து அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி நடைமுறைகளை பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மையத்தில் மேற்கொண்டார். இந்நிலையில், தற்போது நிதிஷ் குமார் ரெட்டி முழு உடல் தகுதியை பெற்றுள்ளார். யோ-யோ டெஸ்ட் உள்ளிட்ட சோதனையில் தேர்ச்சி பெற்ற அவர் விளையாட இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ கமிட்டி அனுமதி அளித்துள்ளது.
இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியினருடன் விரைவில் இணைகிறார். 21 வயதான அவரை ஐதராபாத் அணி நிர்வாகம் கடந்த ஆண்டு ஏலத்துக்கு முன்னதாக ரூ.6 கோடிக்கு தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.