சென்னை மெரினா கடலில் குதித்து 2 இளம்பெண்கள் தற்கொலைக்கு முயற்சி

5 days ago 3

சென்னை மெரினா கடலில் நேற்று இரவு இரண்டு இளம்பெண்கள் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். அப்போது இதனைக் கண்ட, அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் குமரேசன் மற்றும் காவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று இரண்டு இளம்பெண்களையும் காப்பாற்றினர்.

இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "சகோதரிகளான அவர்கள் இருவரும் தங்களது பெற்றோருடன் தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்றொருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களுடைய பெற்றோருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம்பெண்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்" என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரையும் மீட்ட போலீசார் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article