
சென்னை,
'அழியாத கோலங்கள்', 'வி.ஐ.பி.', 'ராஜ வம்சம்' உள்பட பல படங்களில் நடித்தவர் சஹானா ஸ்ரீதர்.
வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 'வள்ளி வேலன்', 'தாமரை', 'சித்தி-2' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். 'சஹானா' என்ற தொடரில் நடித்து பிரபலம் அடைந்ததால் 'சஹானா' ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார்.
சென்னை தியாகராய நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த 'சஹானா' ஸ்ரீதருக்கு மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனர். அவருக்கு வயது 62. இவரது மறைவு தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.