மியான்மர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது

16 hours ago 1

நைப்பியிதோ,

மியான்மர் நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேவேளை, நிலநடுக்கத்தால் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்து 508 பேர் காயமடைந்துள்ளதாகவும், 220 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உலகநாடுகள் உதவ முன்வரும்படி ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.  

Read Entire Article