சென்னை: சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஐதராபாத் – சென்னை எழும்பூர் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்து வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நகை கடைக்கு பணத்தை கொண்டு செல்ல 3 பேரும் முயற்சித்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.