சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

3 months ago 16

சென்னை: சென்னை பெருநகர காவலில் நான்கு மண்டலத்திற்கு உண்டான ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான (Deputy Area Commanders) பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படமாட்டாது.

இப்பணியில் சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் சேவை புரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் குடியரசுத்தலைவர் பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.
கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. சிறந்த மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2. குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்
3. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
4. குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்
5. 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்ப கடிதத்துடன், Curriculum Vitae படிவத்தை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு 16.10.2024 முதல் 31.10.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

முகவரி:
சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15.
தொலைபேசி எண்: 94981 35190, 95667 76222.

The post சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் துணை மண்டல தளபதி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article