15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

3 hours ago 3

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மதுரை மற்றும் விருதுநகரில் நள்ளிரவு 1 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article