சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை

1 hour ago 2

பணியிடங்கள் விவரம்:

1. Senior Secretariat Assistant (Steward): 1 இடம் (ஒபிசி). சம்பளம்:ரூ. 25,500-81,100. வயது: 35க்குள். தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
2. Senior Secretariat Assistant (Stenographer): 4 இடங்கள் (ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Secretariat Assistant (JSA): 2 இடங்கள் (எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 35க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
4. Technician (IT/CSE): 1 இடம் (ஒபிசி) சம்பளம்: ரூ.25,500-81,100. வயது; 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஐடிஐ தேர்ச்சியும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் சயின்ஸில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Multi Tasking Staff: 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.18,000- 56,900. வயது: 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
6. Driver: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பணி எண் 1,2 மற்றும் 4க்கு ரூ.500/-. பணி எண்: 5 மற்றும் 6க்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் திறன் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.nitttrc.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2024.

The post சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை appeared first on Dinakaran.

Read Entire Article