செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருங்குழி பேரூராட்சி அருகே அரசு பேருந்தும், இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. கம்பி ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம், விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியது.
இதில், பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பேருந்துக்குள் சிக்கிய டிரைவர் மற்றும் கண்டக்டரை பெரும் போராட்டத்திற்கு பிறகு படுகாயங்களுடன் மீட்டனர். மேலும் விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.