
சென்னை,
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது.
தனது உடல் தோற்றத்தை மாற்றி இப்படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். அவ்வப்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், மகேஷ் பாபு இப்படத்தில் சில காட்சிகளில் சட்டை அணியாமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படங்களில் சட்டையணியாமல் நடிப்பதை தவிர்த்து வரும் மகேஷ் பாபு இப்படத்தில் முதல்முறையாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.