போர் நிறுத்தம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

4 hours ago 2

சென்னை ,

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது. நமது எல்லையை காக்கும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம்; அமைதி நிலைத்திருக்கட்டும். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article